This is important notification about your company.

We have 10 guests and no members online

பேங்க் ஆப் அமெரிக்கா எம்.டி., டெங்குவுக்கு பலி

பேங்க் ஆப் அமெரிக்காவின் நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் ஜா, 34 டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேங்க் ஆப் அமெரிக்காவின் உலக முதலீடு சந்தை பிரிவின் நிர்வாக இயக்குனராக மும்பையில் பணியாற்றி வந்தவர், சஞ்சீவ் ஜா. இவருக்கு பல நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

ரத்தத்தை உறைய வைக்கும் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைபாடு ஏற்பட்டதால், அதை சரியாக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், நோய் தீவிரமாகி, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது. கடந்த செவ்வாய் கிழமை அவர் உயிரிழந்தார். சிறிய வயதில் உலகளவில் பெரும் சாதனை புரிந்த இந்தியர், டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Designed & Developed By Juram-D