This is important notification about your company.

We have 4 guests and no members online

சென்னையை மிரட்டும் காய்ச்சல்... மருத்துவமனைகளில் 2000 பேர் அனுமதி! Posted By: Suganthi Published: Sunday, October 8, 2017, 17:37 [IST]

சென்னை: டெங்கு மற்றும் பல்வேறு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் 2000க்கும் மேற்ட்டோர் சென்னையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் மழையின் காரணமாகவும் தட்பவெப்பநிலை மாறுபாட்டாலும் டெங்கு உள்ளிட்ட பல வகை காய்ச்சல் பரவி வருகிறது. சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் 2000 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். சென்னை அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் 250 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். இவர்களில் 180 பேர் உள்நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். 27 பேர் டெங்குக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source:oneindia/tamil news

Designed & Developed By Juram-D